தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்...!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தினை பிரதிபலிக்கும் வகையில் கூகுளின் டூடுல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75-வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

அந்த வகையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய உயரங்களை குறிக்கும் வகையில் வானத்தில் பறக்கும் பட்டங்களுடன் கூடிய டூடுலை வெளியிட்டு கவுரப்படுத்தி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு