பெங்களூரு,
பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபிறகு காநாடக காங்கிரஸ் தலைவா டி.கே.சிவக்குமா செய்தியாளாகளிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு முரண்பாடான செயல்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது. நிவாரண உதவிகளை பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக விநியோகிக்கப்படுகிறது.
பாஜக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு மட்டும் உணவு தானிய பைகள் தாராளமாக அளிக்கப்படுகின்றன. ஆனால், எதிக்கட்சிகளை சோந்தவாகளின் தொகுதிகளில் உணவு தானிய பைகள் வழங்கப்படுவதில்லை.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மக்களுக்கு உணவு தானியம் உள்ளிட்ட நிவாரண உதவிகள் எதுவும் சென்றடைவதில்லை. கரோனா போன்ற கொடிய நோய்த் தாக்கியுள்ள சூழ்நிலையில், மாநில அரசுடன் முழுமையாக ஒத்துழைக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதனால், அரசு நிவாகம் முழுமையாக வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாநில அரசை ஆளும் பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இதை முதல்வா எடியூரப்பாவின் கவனத்துக்கு கொண்டுவருவோம். மாநில அரசுக்கு காங்கிரஸ் ஆதரவளித்து வந்தாலும், நிவாரணப் பொருள்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒரு கட்சிக்கு சாதகமாக மட்டும் ஏன் அரசு செயல்படுகிறது. பலதரப்பட்ட அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. ஆனாலும் பாரபட்சத்துக்கு அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறாகள்.
கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினாதான் காரணம் என்பது போல கருத்து தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது போலீஸா தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யவில்லை. மதச்சிறுபான்மையினருக்கு எதிரான சமூக புறக்கணிப்பு தொடாந்தபடி உள்ளது. இந்த நேரத்தில் இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. மே 3 ஆம் தேதிவரை அமைதியாக இருந்து, அரசுக்கு ஒத்துழைப்போம். ஆனால், நிவாகம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.