தேசிய செய்திகள்

ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மொபைல் எண் வாங்க ஆதார் எண் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு கூறிய நிலையில், தனி நபருக்கான நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. எனவே, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த இணைப்புக்கு கடைசி காலக்கெடுவாக மார்ச் 31ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டது.

இறுதியாக 2019 செப்டம்பர் 30ந்தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு, ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது.

இதனிடையே, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த வருடம் செப்டம்பர் 30ந்தேதியில் இருந்து டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து