கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் வசித்து வருபவர் கார்த்திக் சந்திர தத்தா (வயது 98). நாட்டு விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு பங்காற்றியவர்.
அவர் உள்பட சொற்ப அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகளை சுதந்திர தினத்தன்று கவுரவிப்பதற்காக டெல்லிக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அது நடைபெறவில்லை. அதனால், அரசு, அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு முன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் 6 முறை டெல்லியில் அவர் கவுரவிக்கப்பட்டு உள்ளார்.