தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நள்ளிரவு வரை உணவு விடுதிகளை திறக்க அரசு அனுமதி

மராட்டியத்தில் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவு விடுதிகளையும் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

தினத்தந்தி

புனே,

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. எனினும், பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உயரதிகாரிகளுடன் நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின்பு, முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உணவு விடுதிகள் மற்றும் கடைகளின் நேரம் நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 22ந்தேதி முதல் கேளிக்கை பூங்காக்களை திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. எனினும், நீர்சறுக்கு இன்றி அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தில் உத்தவ் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மராட்டியத்தில் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவு விடுதிகளையும் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

அவற்றுடன், அரசால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பிற அமைப்புகளும் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து