புதுடெல்லி,
ஆயுஷ்மான் பாரத் என்று அழைக்கப்படுகிற பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
சுகாதாரத்தின் முக்கியத்துவம் கடந்த ஆண்டில் இன்னும் அதிக அளவில் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாட்டு குடிமக்களுக்கு உயர் தரமான, மலிவான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு நமது அரசு உறுதி கொண்டுள்ளது. இதில் ஆயுஷ்மான் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.