புதுடெல்லி,
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியைப் பொறுத்தமட்டில் எவ்வளவு வட்டி வழங்கவேண்டும் என்று அறங்காவலர்கள் குழு முடிவு எடுத்து, அதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி விட்டால், அந்த வட்டி உடனடியாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 201617 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கியது.
தற்போது 201718 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டியில் இருந்து 7.80 சதவீதமாக மத்திய அரசு குறித்துள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை இந்த விகிதம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.