தேசிய செய்திகள்

21 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

21 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின்கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டீ.) குரூப்பி அதிகாரிகள் 21 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் பேரில் அவர்களுக்கு அதிரடியாக கட்டாய ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தஸ்தை பெற்றிருந்தவர்கள் ஆவார்கள்.

பொதுநலனை கருத்தில் கொண்டு, ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சட்ட விதி எண். 56(ஜே)யின் கீழ் அவர்களுக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வருமான வரி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது இது 5வது முறை ஆகும்.

இதுவரை 85 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு