தேசிய செய்திகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000- அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

தினத்தந்தி

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பணியை துவங்கி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என கூறி உள்ளார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல் மந்திரிமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு