தேசிய செய்திகள்

தெலங்கானா சட்டசபையை கலைக்க கவர்னர் ஒப்புதல்

மந்திரிசபையின் பரிந்துரையை ஏற்று தெலங்கானா சட்டசபையை கலைக்க கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்மந்திரி ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.

எனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அன்று தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மந்திரிசபை கூட்டம் இன்று பிரகாதி பவனைல் நடைபெற்றது. மீண்டும் இன்று கூடியது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2வது முறையாகும். இந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல்வர் சந்திர சேகரராவ் கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்ஹனிடம் இன்று அளித்தார்

இது குறித்து கவர்னரின் பிரதம செயலாளர் கூறும் போது சந்திர சேகர ராவ் மற்றும் அவரது அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து தெலுங்கான சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரையை அளித்தனர். என கூறினார்.

தெலங்கானா அரசை கலைக்கும் தீர்மானம் இன்று அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து அம்மாநில கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தேர்தல் நடக்கும் வரை காபந்து அரசின் பொறுப்பாளராக கே. சந்திர சேகர ராவே நீடிப்பார்.இதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டதால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...