தேசிய செய்திகள்

நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம்: நிர்மலா சீதாராமன்

நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில்துறையினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கும்போது இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலையான பொருளாதார மீட்சியையே மத்திய அரசு விரும்புகிறது. பொருளாதார மீட்சிக்கான அம்சங்கள், பட்ஜெட்டில் நிறைய உள்ளன. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவினங்கள், பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு பணம் அனுப்ப தொழில்நுட்பம் உதவிகரமாக அமைந்தது. கல்வி மற்றும் வேளாண்மை துறைகளிலும் மின்னணு தீர்வுகளை பயன்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்