தேசிய செய்திகள்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி - விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்

அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி

அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்பதால், தேர்தலை எளிதில் எதிர்கொள்ள பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் நாடு முழுவதும் 26 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். சுமார் 4 லட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், இதற்கான திட்டங்களை விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் புதுடெல்லியில் விவசாயிகள், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு