தேசிய செய்திகள்

நதிகள் இணைக்கும் திட்டம்: அரசுக்கு ரூ. 60,000 கோடி நிதி தேவைப்படுகிறது - நிதின் கட்காரி

நதிகள் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு ரூ .60,000 கோடி நிதி தேவைப்படுவதாக மத்திய-மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காரைக்கால்,

காரைக்காலில் தேசிய தொழில்நுட்பகழக பட்டமளிப்பு விழாவில் மத்திய-மந்திரி நிதின் கட்காரி உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், கோதாவரியில் இருந்து காவிரி கடைமடைக்கு உபரி நீர் கொண்டு செல்லும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் கோதாவரி-கிருஷ்ணா- பெண்ணாறு-காவிரி நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ரூ .60,000 கோடி நிதி தேவைப்படுகிறது என்று கூறினார்.

முன்னதாக இந்த திட்டத்திற்கான நிதிகளை உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து மத்திய அரசு திரட்டும் என்று மத்திய-மந்திரி நிதின் கட்காரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து