தேசிய செய்திகள்

பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்தி வைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் மிக உயரிய விருதுகள் என்ற சிறப்பு பெற்ற பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகியவற்றை வழங்கும் பத்ம விருதுகள் விழா டெல்லி ராஷ்டிரபதி பவனில் வருகிற ஏப்ரல் 3ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஏப்ரல் 3ந்தேதி நடைபெற திட்டமிட்டிருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விழா நடைபெறும் நாள் மற்றும் நேரம் பற்றி பின்னர் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்