கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொரோனா கருணைத்தொகை மனுக்கள் ஆய்வு: 4 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைவு.!!

கொரோனா கருணைத்தொகை மனுக்களை ஆய்வு நடத்துவதற்காக 4 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத்தொகை வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு கடந்த 24-ந்தேதி பிறப்பித்த உத்தரவின்படி, கொரோனா கருணைத்தொகை கோரிக்கை மனுக்கள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக கேரளா, ஆந்திரா, மராட்டியம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைந்துள்ளன.

இந்த குழுக்கள் தலா 3 உறுப்பினர்களை கொண்டுள்ளன. கேரள குழுவுக்கு மத்திய சுகாதார அமைச்சக ஆலோசகர் டாக்டர் பி. ரவீந்திரனும், மராட்டிய குழுவுக்கு தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் சுனில் குப்தாவும், குஜராத் குழுவுக்கு என்.சி.டி.சி. முதன்மை ஆலோசகர் டாக்டர் எஸ்.வெங்கடேசும், ஆந்திர குழுவுக்கு என்.சி.டி.சி. இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சிங்கும் தலைமை வகிக்கிறார்கள்.

இந்த குழுக்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கருணைத்தொகை கோரி வந்துள்ள விண்ணப்பங்களில் 5 சதவீத விண்ணப்பங்களை ஆய்வு செய்வார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?