தேசிய செய்திகள்

ஜார்கண்டில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு: காங். கூட்டணி ஆட்சியை பிடித்தது

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரி ஆகிறார். இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது.

81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கி, இம்மாதம் 20-ந்தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்- ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒரே அணியாக களம் இறங்கின. முதல்-மந்திரி வேட்பாளராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அறிவிக்கப் பட்டார்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்), அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள், தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து விலகி விட்டதால், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது.

இதுதவிர, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன. இந்த தேர்தலில், காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன.

ஜார்கண்ட் மாநிலம், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்தது என்பதால், பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கையும் பலத்த பாதுகாப்புடன் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. சில நேரங்களில் இரு கூட்டணியும் ஏறக் குறைய சமமான இடங்களில் முன்னிலையை தக்க வைத்து வந்தன.

நேரம் செல்லச்செல்ல காங்கிரஸ் கூட்டணி தெளிவான முன்னிலை பெறத் தொடங்கியது. இறுதியில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதாதளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பா.ஜனதா, 26 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து