தேசிய செய்திகள்

நவம்பர் 7 முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? - மத்திய அரசு பதிலளிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நவம்பர் 7 முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருகின்ற 14-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில், இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், கொரோனா காலத்தில், காற்றின் தரம் மோசமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கையாக தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.

இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, டெல்லி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு