தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு நாடகமாடிய பெண், சிறையில் அடைப்பு

உடுப்பியில் பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு நாடகமாடிய பெண், சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா நேருநகரை சேர்ந்தவர் உம்னே சைனாப் ஷேக். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து உம்னே சைனாப் ஷேக், குழந்தையை சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அப்போது குழந்தையை, தாயான உம்னே சைனாப் ஷேக் கழிவறை ஜன்னல் வழியாக வீசிவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியுள்ளார். சில தினங்களில் குழந்தை கிம்ஸ் ஆஸ்பத்திரி கழிவறை அருகே உயிருடன் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் உம்னே சைனாப் ஷேக்கிடம் வித்யா நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தை அழகாக இல்லை என்பதால் அவரே கழிவறை ஜன்னல் வழியாக தூக்கி வீசிவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து உம்னே சைனாப் ஷேக்கை, போலீசார் கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீஸ் காவல் விசாரணை முடிந்து நேற்று உம்னே சைனாப் ஷேக் உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, உம்னே சைனாப் ஷேக்குக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் உம்னே சைனாப் ஷேக் சிறையில் அடைக்கப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்