புதுடெல்லி,
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. மாதந்தோறும் வசூலான ஜி.எஸ்.டி. விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதம் (ஜனவரி) ரூ.86 ஆயிரத்து 318 கோடி வசூலானதாக கூறியுள்ளது.இது, டிசம்பர் மாதத்தில் வசூலான ரூ.86 ஆயிரத்து 703 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ.385 கோடி குறைவாகும்.