தேசிய செய்திகள்

மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரம் கோடி -மத்திய நிதி அமைச்சகம் தகவல்

மே மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. #GST

புதுடெல்லி,

கடந்த மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.15 ஆயிரத்து 866 கோடியும், மாநில அரசின் வரி வருவாய் ரூ.21 ஆயிரத்து 691 கோடியும், மாநிலங்களுக்கு இடையேயான வரி வருவாய் ரூ.49 ஆயிரத்து 120 கோடியும், செஸ் வருவாய் ரூ.7 ஆயிரத்து 339 கோடியும் அடங்கும்.

இது கடந்த மாதத்தை விட அதிகமாகும் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.89 ஆயிரத்து 885 கோடியாக இருந்தது.

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. அன்று முதல் மார்ச் 2018ம் ஆண்டு வரை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு