தேசிய செய்திகள்

லஞ்ச புகாரில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது - சி.பி.ஐ. நடவடிக்கை

லஞ்ச புகாரில் ஜி.எஸ்.டி. அதிகாரி ஒருவரை கைது செய்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக இருப்பவர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா. இவர் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் சட்டப்படி ஜி.எஸ்.டி. செலுத்தி வருவதால் லஞ்சம் கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. ஆனால் ரூ.25 ஆயிரமாவது தருமாறு அதிகாரி வற்புறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழில் அதிபர், அதிகாரி பேசிய உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். மேலும் சி.பி.ஐ.யிலும் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட ராஜேஷ் ஸ்ரீவஸ்தவாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்