தேசிய செய்திகள்

வரி வருமானம் பெருகுவதை பொறுத்து ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்படும் - அமைச்சர் மேக்வால்

வரி வருமானத்தைப் பொறுத்து ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என்று நிதித்துறை இணையமைச்சர் மேக்வால் தெரிவித்தார்.

தினத்தந்தி

கொல்கதா

தற்போது 0, 5, 12, 18 மற்றும் 28 என ஐந்து வகையான விகிதங்கள் அமலில் உள்ளன. ஜிஎஸ்டிக்கு முன்னர் 80 லட்சம் முகவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு 13.2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 56,000 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஜிஎஸ்டி நெட்வொர்க்கைப் பொறுத்தவரை அது இன்னும் மேம்படுத்தப்படும் என்றார் அவர். பதிவு செய்துள்ள முகவர்கள் சில கடும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைப்பு சிறந்த முறையில்தான் இருக்கிறது என்றார் அமைச்சர்.

முகவர்கள் கணினி மயம் செய்யப்பட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இது உள்ளீட்டு வரிச் சலுகை மற்றும் மறு ஈட்டு கட்டண வழிமுறையையும் மேற்கொள்ள தேவைப்படும் என்றார் அவர்.

ஜிஎஸ்டி கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். சில மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியில் சலுகை தேவைப்படுகின்றன. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில் இச்சலுகை குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என்றார் அமைச்சர்.

அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டதால்தான் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பான்மை மாநிலங்கள் ஒப்புக்கொண்டன என்ற அடிப்படையில் அது கொண்டு வரப்படவில்லை. ஒரு மாநிலம் எதித்திருந்தாலும் கூட அது அமலுக்கு வந்திருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்