தேசிய செய்திகள்

சிறுபான்மையினர் தொடர்பான வழிகாட்டுதல்கள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

சிறுபான்மையினர் தொடர்பான வழிகாட்டுதல்களை வகுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் 10 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்களை அங்கு சிறுபான்மையினர் என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதால், சிறுபான்மையினர் என்பதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கவும் தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தில் உள்ள பிரிவை திருத்தம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மூத்த வக்கீலுமான அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவின் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை