பீகாரில் கழிவறை கட்டுவதற்கான திட்டத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு என்.ஜி.ஓ.க்களின் வங்கி கணக்கிற்கு முறைகேடாக பணம் பரிமாற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு வாரமும் நிதீஷ் குமார் நடத்தும் லோக் சம்வாத் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் இந்த முறைகேடு பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், குற்றவாளிகள் தப்ப முடியாது. பொதுமக்கள் பணத்தினை கையாடல் செய்தவர்கள், குற்றவாளிகள் என கண்டறியப்பட்டால் அவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே எங்களது கொள்கை என கூறியுள்ளார்.