தேசிய செய்திகள்

குஜராத்: கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

விஷவாயு தாக்கியதில் மயங்கிய தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பண்டிசாரா தொழிற்பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு சாயப்பட்டறை தொழிற்சாலைகள் அமைந்துள்ளன

இந்நிலையில், அங்குள்ள சாயப்பட்டறை தொழிற்சாலையில் கழிவுநிர் சுத்திகரிப்பு தொட்டியை நேற்று 4 தொழிலாளர்கள் சுத்தம் கொண்டிருந்தனர். அப்போது, தொழிலாளர்களை விஷவாயு தாக்கியுள்ளது. இதில் 4 பேரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரையும் மீட்ட சக தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சோனு (வயது 23), திலீப் (வயது 19), சந்தீப் (வயது 23) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.