தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 182 தொகுதிகளுக்கும் முடிவுகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்

குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

அகமதாபாத்,

குஜராத் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக முடிவை அறிவித்துள்ளது. இதில் பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாரதீய பழங்குடியின கட்சி 3 தொகுதிகளிலும் வென்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வென்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பாரதீய ஜனதா 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 41.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டா 5 லட்சத்துக்கு 51 ஆயிரத்து 615 வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமாக இது 1.8 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை பாரதீய ஜனதா 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


இமாச்சல பிரதேசத்தில் பாரதீய ஜனதா 48.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41.7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டா 34,125 வாக்குகளை பெற்றுள்ளது. இது 0.9 சதவீதமாகும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு