தேசிய செய்திகள்

குஜராத்தில் கடும் வெப்பத்தால் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி

வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டதால் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள 'ஹராமி நல்லா' சிற்றோடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி மற்றும் ஒரு ஜவான் கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தனர். இவர்கள் இருவரையும் மற்ற வீரர்கள் மீட்டு புஜில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருவருக்கும் வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் விஸ்வதேவ் மற்றும் தயாள் ராம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஸ்வதேவ் எல்லை பாதுகாப்புப்படையின் 59வது பட்டாலியனை சேர்ந்தவர் ஆவார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை