புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக 2வது முறை பதவியேற்ற மோடி அரசில் மத்திய வெளிவிவகார மந்திரியாக எஸ். ஜெய்சங்கர் பொறுப்பேற்று கொண்டார்.
முன்னாள் வெளியுறவு செயலாளரான இவரது தனி செயலாளராக குஜராத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளவிலான ரவிகுமார் அரோரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுபற்றி அதிகாரிகள் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் அவர்களின் தனி செயலாளராக ரவிகுமார் அரோராவை நியமனம் செய்வதற்கான ஒப்புதலுக்கு துறை ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது துணை செயலாளர் அளவிலான அந்தஸ்து ஆகும்.
இதன்படி 5 வருட காலத்திற்கு அல்லது மந்திரியின் பதவி காலம் வரையில் எது முன்பு வருகிறதோ அதுவரை அவர் அந்த பதவியில் நீடித்திடுவார் என தெரிவித்து உள்ளது.