தேசிய செய்திகள்

குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்கிறார் - விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக இமாலய வெற்றிபெற்றுள்ளது.

தினத்தந்தி

காந்திநகர்,

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து வரும் 12-ம் தேதி குஜராத் முதல் - மந்திரியாக பூபேந்திர பட்டேல் மீண்டும் பதவியேற்கிறார்.

12-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு