புதுடெல்லி,
குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முப்பெரும் தேவியை வணங்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா மாதம் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. குஜராத், மராட்டிய உள்ளிட்ட மாநிலங்களில் 9 நாட்களுக்கு இவ்விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், குஜராத்தில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. தீமை ஒழிந்து நன்மை செழிக்கும் என்பதை குறிக்கும் வகையில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.