தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் 15-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை கொண்ட 15-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

அகமதாபாத்,

குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான 3 வேட்பாளர்களை கொண்ட 15-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. ஆம் ஆத்மி பல மாதங்களுக்கு முன்பே குஜராத்தில் தேர்தல் பணியை தொடங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்களையும் பல்வேறு கட்டங்களாக அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை கொண்ட 15-வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அதில் சித்பூர் தொகுதியில் மகேந்திர ராஜ்புத்தும், மாதர் தொகுதியில் லால்ஜி பர்மரும், உதானா தொகுதியில் மகேந்திர பட்டிலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது