தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண் சுட்டுக்கொலை

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண் இந்திய பாதுகாப்பு படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி


சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்து ஒரு இளம்பெண் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார். எல்லையில் உள்ள கம்பி வேலிகளை கடந்து அவர் இந்தியாவுக்குள் வந்தார். இதை கண்டதும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உஷாரானார்கள். அந்த இளம்பெண்ணை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர்.

எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத அந்த இளம்பெண் தொடர்ந்து முன்னேறி வந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும்படி இருந்தன. இதனால் அந்த பெண்ணை நோக்கி எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த பெண் என்ன நோக்கத்திற்காக ஊடுருவினார் என்பது தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது