புதுடெல்லி,
இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டும் ஹஜ் புனித பயணம் தொடங்கி உள்ளது.
இதில் இந்தியாவில் இருந்து முதல் குழுவினர் நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர். 410 பேர் கொண்ட இந்த குழுவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். பின்னர் கயா, கவுகாத்தி, லக்னோ, ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் இருந்தும் 1500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் சென்றனர்.
சுதந்திரத்துக்குப்பின் முதல் முறையாக இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் துறை சார்பில் 1,75,025 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வதாக கூறிய முக்தார் அப்பாஸ் நக்வி, ஹஜ் புனித பயணத்தை பாதுகாப்பாக முடிப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.