தேசிய செய்திகள்

மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கரோனா வைரஸ்தொற்று 2-வது அலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் சனிக்கிழமை(இன்று) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளேன். அதன்பிறகு வரும்திங்கள்கிழமை நாடு முழுவதும் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

கடந்த ஆண்டு நமது நாட்டில் போதுமான பாதுகாப்பு கவச உடைகள், வென்டிலேட்டர்கள், என்95 முகக்கவசங்கள் இல்லை. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே தன்னிறைவை எட்டினோம். முதல் கொரோனா வைரஸ் அலையை தடுத்தது போன்று 2-வது அலையையும் வெற்றிகரமாக தடுப்போம் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்