தேசிய செய்திகள்

காரை தடுத்த காவலரை சாலையில் இழுத்து சென்ற பா.ஜ.க. மூத்த தலைவரின் ஓட்டுனர்

அரியானாவில் பா.ஜ.க. மூத்த தலைவரின் காரை தடுத்து நிறுத்திய காவலரை காரின் முன்பக்கத்தில் வைத்து ஓட்டுனர் இழுத்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

அரியானாவின் ரேவாரி நகரில் கார் ஒன்று சாலையில் தவறான வழியில் சென்றுள்ளது. இதனால் காவலர் ஒருவர் அந்த காரை தடுத்து நிறுத்தி உள்ளார். ஆனால் அந்த கார் ஓட்டுனர் காவலரை காரின் முன்பக்கத்தில் வைத்தபடி, சாலையில் இழுத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி காவலர் கூறும்பொழுது, தவறான வழியில் சாலையில் சென்ற காரை நான் தடுத்து நிறுத்தினேன். ஆனால் கார் ஓட்டுனர், இது பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான சதீஷ் கோடாவின் கார் என கூறினார். நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு கோடா கோபத்தில் எனது கன்னத்தில் அறைந்து விட்டார் என கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை