கர்னால்
அரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் மனோஜ் மிட்டல். இவர் மாட்டுச்சாணம் சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. டாக்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் மாட்டுசாணம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு உள்ளார்.
மிட்டல் ஒரு பசு காப்பகத்தில் இருந்து பஞ்சக்ரவ்யா அல்லது பசுக்களிடமிருந்து பெறக்கூடிய ஐந்து பொருட்கள் குறித்து பேசுகிறார். பின்னர் அவர் மாட்டு சாணத்தை எடுத்து சாப்பிட்டார், அதே நேரத்தில் தனது தாயார் விரதத்தின் போது அதை சாப்பிடுவார் என கூறுகிறார். சாணம் மனதையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது என்றும், அது உடலுக்குள் நுழைந்தவுடன், அது உடலையும் சுத்தப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.