தேசிய செய்திகள்

அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, ஒரு லட்ச ரூபாயாக உயர்வு

அரியானா மாநிலத்தில் அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அரியானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், அமைச்சர்களுக்கான சலுகைகள் சட்டம்-1972ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

புதிதாக அமைக்கப்பட்ட பாஜக-ஜேஜேபி ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அரியானா அரசாங்கம், திங்களன்று அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படியை இரட்டிப்பாக உயர்த்தியது. 50 ஆயிரம் ரூபாயாக இருந்த அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதோடு அதனுடன் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து ஒரு லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அரியானா பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் ஒரு திருத்தத்தை கொண்டு வருவதற்காக அமைச்சரவை, கொள்கை அடிப்படையில் முடிவெடுத்து உள்ளது. இதன் அடிப்படையில் கிராம பஞ்சாயத்தின் உள்ளூர் பகுதிகளுக்குள் மது விற்பனையை தடை செய்ய அனுமதிக்கிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை