தேசிய செய்திகள்

அரியானா: பாதுகாவலரால் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி பலி

அரியானாவில் பாதுகாவலரால் துப்பாக்கியால் சுடப்பட்ட நீதிபதியின் மனைவி உயிரிழந்தார். விடுமுறை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

குர்கான்,

அரியானா மாநிலம் குர்கானில் கூடுதல் செசன்ஸ் நீதிபதிபதியாக பணியாற்றுபவர் கிருஷ்ணகாந்த். நேற்று நீதிபதி மனைவி ரிது (வயது45), மகன் துருவ்(18) ஆகியோர் அங்குள்ள ஆர்காடியா மார்க்கெட்டிற்கு காரில் சென்றனர். அவர்களுடன் சென்ற பாதுகாவலர் மகிபால் திடீரென நீதிபதி மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு நீதிபதியின் மனைவி ரிது இன்று பரிதாபமாக இறந்தார். அவரது மகன் துருவ் உயிருக்கு போராடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மகிபாலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நீதிபதியின் பாதுகாவலராக பணியாற்றிய அரியானா போலீஸ் நிலைய தலைமைக்காவலர் மகிபாலை நீதிபதி அடிக்கடி திட்டியதாக தெரிகிறது. மேலும் தலைமை காவலர் விடுமுறை கேட்டும் அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு காரில் சென்ற போது மகிபாலை நீதிபதி மனைவி திட்டி உள்ளார். இந்த மன உளைச்சலில் இருந்த பாதுகாவலர் மகிபால் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்