தேசிய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தடை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவர் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். இதனிடையே, எடியூரப்பா தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி எடியூரப்பாவை சந்திக்க சென்றபோது தனது மகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக மார்ச் 14ம் தேதி எடியூரப்பா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேவேளை, எடியூரப்பா மீது புகார் அளித்த சிறுமியின் தாயார் நுரையீரல் பாதிப்பால் கடந்த மாதம் உயிரிழந்தார்.

இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவுக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டு நேற்று பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால், எடியூரப்பாவை சி.ஐ.டி. விசாரணை அமைப்பு எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணைக்காக வரும் 17ம் தேதி சி.ஐ.டி. விசாரணை அமைப்புமுன் எடியூரப்பா ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்