தேசிய செய்திகள்

“நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார்” - மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

அத்துடன் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து இருப்பதோடு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றுக்கும் மத்திய அரசின் தவறான அணுகு முறையே காரணம் என்று கூறி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் நேற்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகம், ரெயில் நிலையம், பாராகம்பா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் பேரணியாக மைதானத்துக்கு வந்தனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மோடி அரசு கூறியது. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தால் அதன் பிறகு மீளவே முடியவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்