பெங்களூரு,
கர்நாடகா முதல் மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நேற்று முன் தினம் விலகினர். கட்சி மேலிடம் அறிவுறுத்தலின் படி எடியூரப்பா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. வயது மூப்பு காரணமாக அவரை பா.ஜனதா மேலிடம் நீக்கியதாக தெரிகிறது. எடியூரப்பா பதவி விலகியதையடுத்து புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக்கொண்டார்.
முதல் மந்திரியாக பதவியேற்ற பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில், கட்சிக்காகவும் கர்நாடக வளர்ச்சிக்காகவும் எடியூரப்பா செய்த பங்களிப்பை அளவிட முடியாது. சமூக நலனுக்காக எடியூரப்பாவின் அர்ப்பணிப்பு பாராட்டப்படும் என்றார்.