தேசிய செய்திகள்

மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சஞ்சனா கல்ராணி

மகனின் புகைப்படத்தை, நடிகை சஞ்சனா கல்ராணி வெளியிட்டார்.

பெங்களூரு: கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் டாக்டரான அஜீஸ் பாஷா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து கர்ப்பமான அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அலாரிக் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் தனது குழந்தையுடன் சஞ்சனா கல்ராணி போட்டோ சூட் நடத்தினார். அந்த போட்டோக்களையும், அதுதொடர்பான வீடியோக்களையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. அவற்றை பார்த்த பலரும் சஞ்சனா கல்ராணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...