ராஞ்சி,
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தலைமைச்செயலகத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று முன்தினம் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி பன்னா குப்தா உள்ளிட்ட மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த நிலையில், மந்திரி பன்னா குப்தாவுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் முடிவானது. இதனையடுத்து அனைவரும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறும், தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் மந்திரி வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதன்காரணமாக முதல்-மந்திரி கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே 2 முறை ஹேமந்த் சோரனுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வெளிவந்தன.