தேசிய செய்திகள்

புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்

புகையிலை விற்பனை தடை செய்யுமாறு மாநில அரசுகள்,யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதன் மூலமே இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதைத் தடுக்கும் வகையில் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடை செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

புகை வராத புகையிலை பொருட்களும் தூய்மையற்ற சூழலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. இந்த சூழல், கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும். புகை வராத புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் பெரும் கூட்டங்கள் கூடுகின்றன. இது மூலமாகவும் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு