தேசிய செய்திகள்

ரத்த தானம் மனிதகுலத்திற்கு ஆற்றும் சிறந்த சேவை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா

ரத்த தானம் செய்வது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஆற்றும் சிறந்த சேவை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அப்போது அவர் ரத்த தானம் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைப் போல ரத்த தான அமிர்தப் பெருவிழாவும் பெரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். இதையொட்டி நாடு தழுவிய அளவில் நடைபெறும் மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய முன் வருமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

ரத்த தானம் செய்வது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஆற்றும் சிறந்த சேவையாகும். 2021-ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் ஆண்டுத் தேவை சுமார் 1.5 கோடி யூனிட்கள். இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. வாழ்நாளில் மூவரில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை, மேலும் 1 யூனிட் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். ஒரு நபரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்" என்று கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்