தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் திறப்பு குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

காநாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை திறப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு கல்லூரிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் அரசுக்கு எந்த குழப்பமும் இல்லை எனவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;-

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி-கல்லூரிகளை திறப்பதில் அரசுக்கு எந்த குழப்பமும் இல்லை.

முதலில் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு உயர்நிலை பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் பள்ளிகள் திறக்கப்படாது. இந்த விஷயத்தில் அரசு மிகுந்த கவனமுடன் செயல்படும். மாணவர்களின் உடல் நலன் தான் அரசுக்கு முக்கியம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை