கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

33 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை

33 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 110 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,08,47,304 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,016 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 05 லட்சத்து 48 ஆயிரத்து 521 பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.24%, உயிரிழப்பு விகிதம் 1.43% ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

15 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்புகூட பதிவாகவில்லை. 7 மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. 33 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிப்படைந்தவர்களில் 3.12% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில் 71% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை