ஐதராபாத்,
தெலுங்கானா மாநில சட்டசபையில் பட்ஜெட் மீது பொது விவாதம் நடந்தது. அதில் பங்கேற்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பேசியதாவது:-
எனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. உடல்நிலை சரியில்லாததால், நான் பதவி விலகி, என் மகனும், மந்திரியுமான கே.டி.ராமாராவை முதல்-மந்திரி ஆக்குவேன் என்று வதந்தி பரவுகிறது.
ஆனால், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். தெலுங்கானா ராஷ்டிர சமிதி இன்னும் 3 தடவை ஆட்சியை பிடிக்கும். எனக்கு இப்போது 66 வயது ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நான் முதல்-மந்திரி பணியை கவனிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.