கோப்புப் படம் AFP 
தேசிய செய்திகள்

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்ப அலை தொடர வாய்ப்பு..!

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் வருகிற நாட்களில் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து கூறிய இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி, "வெப்பநிலை 39 டிகிரி வரை உயரப் போகிறது, மேலும் வெப்பநிலை 40 டிகிரியை எட்டும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் வெப்பநிலையில் சிறிது வீழ்ச்சி இருக்கும், பின்னர் மீண்டும் அதிக வெப்பநிலை முழுவதும் தொடரும் என்று கூறினார்.

வங்காள விரிகுடாவிலிருந்து வடகிழக்கு வரை வீசுகின்ற வலுவான தென்மேற்கு காற்றின் காரணமாக குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் உள்ள மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம்-மேகாலயாவில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரை தனிமைப்படுத்தப்பட்ட கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை