தேசிய செய்திகள்

மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு வெப்பம் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், வடமேற்கு பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் ஐந்து புள்ளிகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்